சினிமா

வாவ்…இவருக்கு வயசு குறைஞ்சிக்கிட்டே போகுது… விஜயின் வைரல் புகைப்படம்….

Published

on

ரசிகர்களால் தளபதி என அழைக்கப்பட்டு வருபவர் நடிகர் விஜய். துவக்கத்தில் மொக்க படங்களில் நடித்தாலும் கொஞ்சம் கொஞ்சமாக காதல் படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியவர். பூவே உனக்காக திரைப்படம் அவரின் திரை வாழ்க்கையை மாற்றியது. காதலுக்கு மரியாதை திரைப்படத்தின் வெற்றி அவரை முன்னணி ஹீரோக்களில் ஒருவராக மாற்றியது.

அதன்பின் பல காதல் படங்கள், ஆக்‌ஷன் படங்கள் என நடித்து தற்போது மாஸ் நடிகராக அவர் உயர்ந்துள்ளார். அவரின் தரிசனம் கிடைக்காதா என அவரின் ரசிகர்கள் அவரின் வீட்டின் முன் கால் கடுக்க காத்திருக்கின்றனர்.

ஒருபக்கம் விஜய் திரைத்துறைக்கு வந்து 29 வருடங்கள் ஆகிவிட்டதை அவரின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இதற்காக டிவிட்டரில் ஒரு காமன் டிபியும் உருவாக்கப்பட்டுள்ளது. டிவிட்டரில் #29YearsOfVijayism மற்றும் #29YrsOfVIJAYSupremacy என்கிற ஹேஷ்டேக்குக்களும் டிரெண்டிங்கில் இருக்கிறது.

இந்நிலையில், சமீபத்தில் எடுக்கப்பட்ட விஜயின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அனேகமாக இது பீஸ்ட் படப்பிடிப்பில் எடுக்கப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. இந்த புகைப்படங்களை விஜய் ரசிகர்கள் பகிர்ந்து ‘விஜய்க்கு வயசே ஆகாது.. 29 வருஷம் இல்ல. அவருக்கு வயசே 29 மாதிரிதான் இருக்கு’ என பதிவிட்டு வருகின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version