சினிமா

ரஜினி அவ்ளோ தான், அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் தான்: சீமான் பரபரப்பு பேட்டி!

Published

on

தமிழ் சினிமாவில் தற்போது ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டாராக உள்ளார். இவருக்கு பிறகு அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்பதில் நடிகர் விஜய் மற்றும் அஜித்தின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் மோதிக்கொள்வது உண்டு. இந்நிலையில் அடுத்த சூப்பர் ஸ்டார் நடிகர் விஜய் தான் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சீமான், ரஜினிக்கு அடுத்து விஜய் தான் சூப்பர் ஸ்டார் என கூறினார். இருவருக்குமிடையே தான் போட்டி நிலவுகிறது. ரஜினி இன்னும் எத்தனை படங்களில் நடித்துவிடுவார். சன் பிக்சர்ஸுக்கு ஒரு படம் நடிக்கிறார், அடுத்து லைகாவுக்கு ஒரு படம் நடிப்பார், மொத்தமாக இன்னும் ஒரு நான்கு படங்கள் நடித்துவிடுவாரா, அடுத்து விஜய் தான்.

இதை இப்போது அல்ல, 2006-ஆம் ஆண்டு சன் டிவியில் வணக்கம் தமிழகம் நிகழ்ச்சியில் பேசும் போதே கூறிவிட்டேன் என்றார் சீமான். ஆனால் சில மாதங்களுக்கு முன்னர் முன்னர் நடிகர் சிம்புவை கதாநாயகனாக வைத்து அடுத்தடுத்து படங்கள் இயக்கவுள்ளதாக சீமான் அறிவித்தார். அப்போது அடுத்த சூப்பர் ஸ்டார் சிம்பு என்று சீமான் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் அந்த படங்கள் என்ன ஆனது என்பதும் தெரியவில்லை. இந்நிலையில் சீமான் தற்போது விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என கூறியுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version