வீடியோ

தீ இது தளபதி.. பேரை கேட்டா விசில் அடி.. வாரிசு பாட பாடல் வரிகள்!

Published

on

விஜய் நடிப்பில் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ள வாரிசு படத்தின் 2-ம் சிங்கிள் பாடல் தீ இது தளபதி.. பேரை கேட்டா விசில் அடி என்ற பாடல் ரிலீஸ் ஆகியுள்ளது.

இந்த பாடல் வரிகளை கவிஞர் விவேக் எழுதியுள்ளார். சிம்பு பாடியுள்ளார். ஜானி மாஸ்டர் நடனம் அமைத்துள்ளார்.

“தீ இது தளபதி.. பேரை கேட்டா விசில் அடி..” பாடல் வரிகள்

உன்ன பாத்து சிரிச்சா
அத உள்ளுக்குள்ள நெருப்பாக்கு
அவமானம் கெடச்சா
அதில் கிரீடம் ஒன்னா உருவாக்கு
உன்ன குத்தி உலகமே
ஆனந்தம் அடையுமே
திருப்பி அடிக்கும் போது தான் யாரு நீன்னு புரியுமே
இட்ஸ் டைம் இட்ஸ் டைம் டு கிவ் இட்:யு பாக்:யு மாமே
இது திருப்பி இது திருப்பி குடுக்கும் நேரம் மாமே
உடைஞ்ச மேகமே மா மழையை குடுக்குமே
கிழிஞ்ச வேதையிலே தான் காடு பொறக்குமே
புதிய எதிரியே வா என்னை எதிர்க்கவே
பழைய எதிரிகள் என் ரசிகர் படையிலே
தீ இது தளபதி
பேரை கேட்டா விசில் அடி
தீ இது தளபதி
உங்க நெஞ்சின் அதிபதி
ஸ்டன்சா
காயம் பொறுத்து சென்று பழகு முள் இருக்கும் வழியிலே
கூட நடந்த கூட்ட சத்தம் புல்லரிக்கும் உடலிலே
கால்கள் தடுக்கி மலையில் இருந்து கீழே போகும் நொடியிலே
கைகள் அசைத்து பாரு புதிய ரெக்கை பிறக்கும் வழியிலே
கண்ணீரோ
நீ உனக்கு சொல்லும் ஆராரோ
கண் தூங்கி எழுந்த பின்பு நீ வேறோ
உடைஞ்ச மேகமே மா மழையை குடுக்குமே
கிழிஞ்ச வெதையிலே தான் காடு பொறக்குமே
புதிய எதிரியே வா என்னை எதிர்க்கவே
பழைய எதிரிகள் என் ரசிகர் படையிலே
தீ இது தளபதி
பேரை கேட்டா விசில் அடி
தீ இது தளபதி உங்க நெஞ்சின் அதிபதி
Thee Thalapathy | Thalapathy Vijay | STR | Vamshi Paidipally | Thaman

author avatar
seithichurul

Trending

Exit mobile version