சினிமா செய்திகள்

மாஸ்டர், பீஸ்ட் படங்களைத் தொடர்ந்து வாரிசு படமும் இந்தியில் ரிலீஸ்.. என்ன பெயர் தெரியுமா?

Published

on

நடிகர் விஜய் நடிப்பில் வாரிசு திரைப்படம் பொங்கலுக்குத் தமிழ் மற்றும் தெலுங்கில் ரிலீஸ் ஆக உளது.

இந்நிலையில் வாரிசு படம் இந்தியிலும் பொங்கலின் போது திரை அரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளதாகப் படத்தின் தயாரிப்பாளர் அண்மையில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இந்தியில் ரிலீஸ் ஆக உள்ள வாரிசு படத்திற்கு வாரிஸ் என பெயரிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரையில் வெளியாகவில்லை.

மாஸ்டர், பிஸ்ட் படங்களைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் வாரிசு படமும் இந்தியில் ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆக உள்ளது.

தமிழில் கார்த்தி நடிப்பில் மிகப் பெரிய வெற்றிப் பெற்ற தோழா படத்தை எடுத்த வம்சி, வாரிசு படத்தை இயக்கியுள்ளார். விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.

சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட நடிகர்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். தமன் இசை அமைத்துள்ளார்.

வாரிசு படத்தை தொடர்ந்து விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். அந்த பட்டத்திற்குக் கமல் நடிப்பில் வெளியான விக்ரம் படத்திற்கு எடுத்ததை போன்று ப்ரோமோ வீடியோ எடுக்கும் பணிகள் இப்போது நடைபெற்று வருகின்றன.

மேலும் தெலுங்கில் வாரிசு படம் சிரஞ்சீவி, பாலகிருஷாண் படங்களுக்கு இணையான திரை அரங்குகளில் ரிலீஸ் ஆகும் என தில் ராஜ் தெரிவித்துள்ளார்.

முன்னதாக சங்கராந்தியின் போது தெலுங்கு படங்களுக்கு தான் திரை அரங்குகள் முன்ணுரிமை வழங்க வேண்டும் என தெலுங்கு தயாரிப்பாளர்கள் எதிர்த்தது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version