சினிமா செய்திகள்

வாரிசு படத்தின் கிளைமேக்ஸ் காட்சி லீக்.. அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள்!

Published

on

நடிகர் விஜய் பீஸ்ட் படத்தை தொடர்ந்து தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற படத்தில் நடித்து வருகிறார்.

வாரிசு படத்தின் முதல் சிங்கிள் பாடல் ரஞ்சிதமே சென்ற வாரம் ரிலீஸ் ஆகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இப்படித்தின் ரஞ்சிதமே பாடல் படப்பிடிப்பிலிருந்து விஜய் நடனம் ஆடும் காட்சிகள் அண்மையில் லீக் ஆகி படக்குழுவினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இப்போது வாரிசு படத்தின் கிளைமேக்ஸ் காட்சி இணையத்தில் லீக் ஆகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாரிசு படம் பொங்கலுக்குத் திரைக்கு வர உள்ள நிலையில், இப்படியே தொடர்ந்து பல காட்சிகள் லீக் ஆனால் என்ன ஆகும் என்று ரசிகர்கள் புலம்பி வருகிறார்கள்.

முன்பெல்லாம் படம் ரிலீஸ் ஆன பிறகு தான் அது திருட்டு வீசிடி, தமிழ் ராக்கஸ் போன்ற தளங்களில் வெளியாகிவிட்டது என்று சலசலப்பை ஏற்படுத்தும். இப்போது இந்த ஸ்மார்போன் உலகில் எல்லோர் கையிலும் கேமரா இருப்பதால் இப்படி அடிக்கடி பத்தின் காட்சிகள் ரிலீஸ்க்கு முன்பே லீக் ஆகி வருகிறது.

வாரிசு படத்தில், பிரகாஷ்ராஜ், ஷாம், பிரபு, சரத்குமார், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். தமன இசை அமைத்துள்ளார்.

Trending

Exit mobile version