சினிமா செய்திகள்

‘மாஸ்டர்’ படத்தை வாங்கியது நெட்ஃபிளிக்ஸ்.. ஓடிடியில் நேரடியாக ரிலீஸ் ஆகுமா?

Published

on

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் மற்றும் பலர் நடித்துள்ள படம் மாஸ்டர். அனிருத் இசையில் ஏற்கனவே வெளியான பாடல்கள், ரசிகர்களிடையில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

மாஸ்டர் படம் ஏப்ரல் மாதம் வெளியாக இருந்தது. ஆனால் மார்ச் மாதம் முதல் கோவிட்-19 தொற்று காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. திரை அரங்குகளும் மூடப்பட்டன. எனவே ரிலீஸ் ஆக தாமதமான படம் 2021 பொங்கலுக்குத் திரை அரங்கில் வெளியாக வாய்ப்புள்ளதாக் கூறப்படுகிறது.

ஆனால் திரை அரங்குகளில், தற்போது வரை 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 100 சதவீத இருக்கைகளுக்கும் அனுமதி கிடைத்தால்தான் நல்ல வசூல் கிடைக்கும் என்று மாஸ்டர் பட தயாரிப்பு நிறுவனம் நினைக்கிறது.

தீபாவளியின் போது வெளியான குறைந்த பட்ஜெட் திரைப்படங்கள் அனைத்தும், 50 சதவீத இருக்கைக்கு மட்டும் அனுமதி மற்றும் கொவிட்-19 தொற்று அச்சம் காரணமாக நடத்தையே சந்தித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

மாஸ்டர், விஜய் நடித்த படம் என்பதால் திரை அரங்குகளில் வெளியானால் அவரது ரசிகர்களிடையில் நல்ல வரவேற்பு இருக்கும். ஆனாலும் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி அளித்தால் நன்றாக இருக்கும் என்று தயாரிப்பு நிறுவனம் எதிர்பார்க்கிறது.

சில இடங்களில் கொரோனா இரண்டாம் அலை உருவாகி வரும் நிலையில், பொங்கலுக்கு முன்பு திரை அரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி வழங்கப்படுமா என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது.

மறுபக்கம் மாஸ்டர் திரைப்படத்தை, ஓடிடி நிறுவனமான நெட்ஃபிளிக்ஸ் பெரும் தொகை கொடுத்து நேரடியாக ரிலீஸ் செய்ய வாங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தயாரிப்பு நிறுவனம் தரப்பில் விசாரித்த போது திரை அரங்கில் வெளியிடுவதா? ஓடிடியில் வெளியிடுவதா என்ற குழப்பத்தில் உள்ளதாகவும், இன்னும் முடிவு செய்யவில்லை என்றும் கூறுகின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version