சினிமா செய்திகள்

ஜனவரி 13-ம் தேதி ரிலீஸ் ஆகும் மாஸ்டர்!

Published

on

மாஸ்டர் திரைப்படம் ஜனவரி 13-ம் தேதி ரிலீஸ் ஆக வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.

ஏப்ரல் மாதம் வெளியாக இருந்த மாஸ்தர் திரைப்படம், கொரோனா ஊரடங்கு காரணமாக இப்போது வரை ரிலீஸ் ஆகாமல் உள்ளது.

திரை அரங்குகள் திறக்கப்பட்டாலும், 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகிறனர். இந்த சூழலில் மாஸ்டர் வெளியானால் நட்டம் ஏற்படும். எனவே ஓடிடியில் படம் வெளியாக அதிக வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டது. அதற்கு மறுப்பு தெரிவித்த தயாரிப்பு நிறுவனம், மாஸ்டர் படம் திரை அரங்குகளில் தான் வெளியாகும் என்று அறிக்கை வெளியிட்டது.

எப்படியும் மாஸ்டர் படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று கூறப்படும் நிலையில், ஜனவரி 13-ம் தேதி வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

13 மற்றும் 14-ம் தேதிகளில், விஜய் ரசிகர்கள் மாஸ்டர் திரைப்படத்தைக் கொண்டாடினால், 16-ம் தேதியிலிருந்து குடும்பம், குடும்பமாகத் திரைக்கு வர வாய்ப்புகள் உள்ளது என்று படக்குழு எதிர்பார்க்கிறது.

முன்னதாக விஜய் நடிப்பில் போக்கிரி, நண்பன், அழகிய தமிழ் மகன், ஜில்லா, பைரவா உள்ளிட்ட படங்கள் வெளியாகியுள்ளன. தற்போது வெளிவரும் தகவல்களை வைத்து பார்க்கும் போது மாஸ்டர் கண்டிப்பாகப் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிவிடும் என்று நம்பலாம்.

seithichurul

Trending

Exit mobile version