சினிமா செய்திகள்

நெல்சனின் ‘பீஸ்ட்’ படமும் ஒரு கடத்தல் படம் தான்: கசிந்த கதை!

Published

on

தளபதி விஜய் நடித்து வரும் ‘பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விரைவில் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தின் கதை என்ன என்பது குறித்த தகவல் படக்குழுவினர்களிடம் இருந்து கசிந்து உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இயக்குனர் நெல்சன் இயக்கிய முதல் படமான ’கோலமாவு கோகிலா’ படத்தில் போதைப்பொருள் கடத்தல் குறித்த கதையம்சம் கொண்டது என்பது தெரிந்ததே.

அதேபோல் நெல்சனின் இரண்டாவது படமான ’டாக்டர்’ திரைப்படத்தில் குழந்தைகளை கடத்தி வெளிநாட்டுக்கு கடத்தும் கதை அம்சம் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் அவருடைய மூன்றாவது படமான ‘பீஸ்ட்’ படத்திலும் ஒரு கடத்தல் கதை அம்சம் தான் என்றும் இதில் தங்க கடத்தல் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.

விமானம் வழியாக ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்கு தங்க கடத்தல் செய்வது குறித்த கதையம்சம் கொண்ட படம் என்றும் ஆனால் முந்தைய இரண்டு படங்களும் காமெடியாக இருந்த நிலையில் இந்த முழுக்க முழுக்க சீரியஸாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. மொத்தத்தில் ‘பீஸ்ட்’ படமும் கடத்தல் கதை படம் என்று செய்திகள் வெளியாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending

Exit mobile version