சினிமா செய்திகள்

இதுதான் அரபிக் குத்துப்பாட்டு: ‘பீஸ்ட்’ படத்தின் சூப்பர் உரையாடல் வீடியோ!

Published

on

தளபதி விஜய் நடித்த ‘பீஸ்ட்’ படத்தின் சூப்பர் அப்டேட் இன்று வெளியாகும் என ஏற்கனவே சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்திருந்த நிலையில் சற்று முன்னர் படத்தில் இடம்பெற்றுள்ள அரபிக் குத்துப்பாட்டு பிப்ரவரி 14ஆம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளது

இதுகுறித்து வெளியான வீடியோவில் இயக்குனர் நெல்சன், இசையமைப்பாளர் அனிருத் மற்றும் பாடலாசிரியர் சிவகார்த்திகேயன் ஆகிய மூவரும் காமெடியாக பேசும் உரையாடல் காட்சிகள் உள்ளன

‘பீஸ்ட்’ படத்திற்காக அரபிக் குத்துப் பாடல் ஒன்றை கம்போஸ் செய்து விட்டு விஜய்க்கு அந்த பாட்டை போட்டு காட்டிய நிலையில் விஜய் போனிலேயே மூவரையும் கலாய்க்கும் காட்சிகள் இந்த வீடியோவில் இடம் பெற்று உள்ளன

மொத்தத்தில் இந்த அரபி குத்துப்பாட்டு அனிருத்தின் பாடல்கள் மிகப் பெரிய அளவில் வைரலாகும் பாடல்களில் ஒன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பாடல் பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினத்தில் வெளியாகும் எனவும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

விஜய் ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருக்கும் இந்த படத்தில் வில்லனாக செல்வராகவனும் மற்றும் யோகிபாபு, ஷைன் டாம் சாக்கோ, விடிவி கணேஷ், அபர்ணா தாஸ் உள்பட பலரும் நடித்துள்ளனர்.

Arabic Kuthu - Beast First Single Promo | Thalapathy Vijay | Sun Pictures | Nelson | Anirudh

 

author avatar
seithichurul

Trending

Exit mobile version