சினிமா

நம்பர் ஒன் இடம்! – டிவிட்டரில் சாதனை படைத்த நடிகர் விஜய்…..

Published

on

தமிழ் சினிமாவில் தளபதியாக வலம் வருபவர் நடிகர் விஜய். தொடக்கத்தில் தனது அப்பா எஸ்.ஏ.சந்திர சேகர் இயக்கத்தில் மொக்கை படங்களில் நடித்து வந்த அவர் பூவே உனக்காக படத்திற்கு பின் காதல் கதைகளில் நடிக்க துவங்கினார். அதன்பின் கொஞ்சம் கொஞ்சமாக ஆக்‌ஷன் ஹீரோவாக மாறினார். இவருக்கு லட்சக்கணக்கில் ரசிகர்கள் உள்ளனர். இவர் டிவிட்டரில் ஒரு டிவிட் செய்தால் அதை பல லட்சம் பேர் லைக் செய்கின்றனர்.

மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு நடந்த போது ரசிகர்களுடன் செல்பி எடுத்து டிவிட்டரில் இவர் பகிர்ந்த புகைப்படம் பல லட்சம் பேரால் லைக் செய்யப்பட்டது.

இந்நிலையில், 2021ம் ஆண்டில் டிவிட்டரில் அதிகம் பேசப்பட்ட தென்னிந்திய நடிகர்களில் விஜய் முதலிடம் பிடித்துள்ளார். 4வது இடத்தில் சூர்யா, 7வது இடத்தில் ரஜினிகாந்த், 9வது இடத்தில் தனுஷ், 10வது இடத்தில் அஜித்குமர் இடம் பெற்றுள்ளனர்.

இந்த செய்தியை விஜய் ரசிகர்கள் உற்சாகத்துடன் பகிர்ந்து வருகின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version