சினிமா செய்திகள்

இப்படி கவுத்திட்டியே நெல்சா? விஜய் ரசிகர்கள் புலம்பல்!

Published

on

தளபதி விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி இருக்கும் நிலையில் இந்த படத்திற்கு ஏற்பட்ட இந்த மிகப்பெரிய எதிர்பார்ப்பு புஸ்வாணம் ஆகிவிட்டதாக முதல் காட்சி முடிந்ததும் தெரிந்து விட்டது.

இந்த படத்தில் விஜய் தனி ஒரு ஆளாக படத்தை தூக்க பெருமுயற்சி எடுத்த போதிலும் அது வீணாகி விட்டது என்றும் திரைக்கதை மற்றும் காட்சி அமைப்புகள் முழுக்க முழுக்க சொதப்பலாக இருந்ததால் படம் ரசிக்கும் வகையில் இல்லை என்றும் விஜய் ரசிகர்களே கருத்து தெரிவித்து வருகின்றனர் .
படம் முடிந்து வெளியே வந்த விஜய் ரசிகர்கள், ‘ இப்படி கவுத்திட்டியே நெல்சன் என்றும் தளபதியை வைத்து படம் எடுக்க கிடைத்த வாய்ப்பை வீணடித்து விட்டீர்களே என்றும் கூறிவருகின்றனர் .

இந்த லட்சணத்தில் ரஜினியை வைத்து அடுத்த படத்தை நெல்சன் இயக்க உள்ள நிலையில் அந்த படம் ரத்தாகும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது மொத்தத்தில் இயக்குனர் நெல்ச்ன் தனது கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் படத்தின் வெற்றியை இந்த ஒரே படத்தின் மூலம் இழந்து விட்டார் என்று தான் கூற வேண்டும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

seithichurul

Trending

Exit mobile version