சினிமா செய்திகள்

நீங்களாம் தளபதியை பத்தி பேசலாமா? மதுரை ஆதினத்தை கண்டித்து விஜய் ரசிகர்கள் போஸ்டர்

Published

on

விஜய் படங்களை பார்க்க வேண்டாம் என சமீபத்தில் மதுரை ஆதினம் பேசிய நிலையில் அவருக்கு கண்டனம் தெரிவித்து விஜய் ரசிகர்கள் வெளியிட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விஜய் தனது படங்களில் இந்து மதத்திற்கு எதிராக வசனங்களை பேசி வருவதாகவும் அதனால் அவரது படங்களை பார்க்க வேண்டாம் என்றும் சமீபத்தில் மதுரையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மதுரை ஆதினம் பேசினார்.

அவரது இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் மதுரை ஆதீனத்திற்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் மதுரை விஜய் ரசிகர்கள் மதுரை முழுவதும் போஸ்டர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

மடத்தின் சொத்துக்களை கொள்ளையடிக்க திட்டம் போடும் நீங்க எல்லாம் தளபதியை பற்றி பேசலாமா தப்பா? வீண் விளம்பரத்திற்காக கோமாவில் இருந்து எழுந்து வந்து பேசுவதை நிறுத்தி கொள்ளுங்கள். எங்களுக்கு ஜாதி மதம் எதுவும் இல்லை. தளபதி மேல் கொண்ட அன்புக்கு வானமே எல்லை’ என அந்த போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Trending

Exit mobile version