தமிழ்நாடு

சர்கார் பிரச்சனை: மிரட்டல் வீடியோ வெளியிட்ட விஜய் ரசிகர்கள் அதிரடி கைது!

Published

on

கடந்த தீபாவளிப் பண்டிகையையொட்டி நடிகர் விஜய் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடித்த சர்கார் திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் அதிமுகவுக்கு எதிரான சில காட்சிகள் இடம்பெற்றதால் சர்ச்சை உருவாகியது. இதனையடுத்து சர்கார் படத்துக்கு எதிராக அதிமுகவினர் வரிந்துகட்டி களமிறங்கினர்.

நடிகர் விஜயின் பேனர்கள் கிழிக்கப்பட்டன, தமிழக அமைச்சர்கள் நடிகர் விஜயை கடுமையாக விமர்சனம் செய்தனர். இந்நிலையில் இதற்கு போட்டியாக விஜய் ரசிகர்களும் தமிழக அரசுக்கு எதிராக செயல்பட்டனர். குறிப்பாக சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டு எதிர்ப்பை பதிவு செய்தனர்.

விஜய் ரசிகர்கள் என தங்களை அறிமுகப்படுத்திக்கொண்ட இரண்டு இளைஞர்கள் கையில் அரிவாளோடு தமிழக அமைச்சர்களுக்கு மிரட்டல் விடுத்தனர். மேலும் அச்சில் ஏற்றமுடியாத சில கெட்டவார்த்தைகளையும் அவர்கள் பேசினர். வாட்ஸ் அப்பில் இந்த வீடியோ வைரலாக பரவியதையடுத்து கடந்த நவம்பர் 12-ஆம் தேதி இவர்களை கைது செய்யுமாறு பிரகாஷ் என்பவர் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்தார்.

இந்நிலையில் நேற்று இது தொடர்பாக சஞ்சய், அனிஷேக் என்ற இரண்டு இளைஞர்களை மத்தியக் குற்றப்பிரிவு காவல் துறை கைது செய்து விசாரணை நடத்தினர். அதில், அந்த மிரட்டல் வீடியோவை எடுத்தது வடபழனியைச் சேர்ந்த அனிஷேக் என்பதும், வீடியோவில் தோன்றியவர்கள் எண்ணூரை சேர்ந்த சஞ்சய், லிங்கதுரை என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இவர்களிடம் லிங்கதுறை குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

seithichurul

Trending

Exit mobile version