சினிமா செய்திகள்

’பீஸ்ட்’ படம் பிடிக்காததால் திரையினை கிழித்த விஜய் ரசிகர்கள்: பெரும் பரபரப்பு!

Published

on

’பீஸ்ட்’ படம் பிடிக்காததால் திரையரங்கில் உள்ள திரையை கிழித்து ரசிகர்கள் வெறிச்செயல் செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது .

விஜய் நடித்த ’பீஸ்ட்’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் தீவிர விஜய் ரசிகர்களே இந்த படத்தை கழுவி ஊற்றி வருகின்றனர். விஜய் போன்ற நடிகரை இயக்குவதற்கு நெல்சனுக்கு அனுபவம் போதவில்லை என்றும் விஜய்க்கு எந்தவிதமான மாஸ் காட்சிகளும் வைக்கவில்லை என்றும் படம் படு சொதப்பலாக இருப்பதாகவும் திரைக்கதை ரொம்ப சுமார் என்றும் விஜய் ரசிகர்களே தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சேலம் மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள திரையரங்கில் படம் பார்த்த ரசிகர்கள் ’பீஸ்ட்’ படம் படு மோசமாக இருப்பதை கண்டு ஆத்திரத்தில் தியேட்டரில் உள்ள திரையினை கிழித்து வெறிச்செயல் செய்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக தியேட்டருக்கு வந்து விஜய் ரசிகர்களை விரட்டி அடித்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடைசியாக விஜய் நடித்த புலி திரைப்படம் தான் விஜய் ரசிகர்களுக்கு பெரும் அதிருப்தியை தந்த படம் என்றாலும், அந்த படமாவது குழந்தைகளுக்கு பிடித்த படமாக இருந்தது. ஆனால் ’பீஸ்ட்’ திரைப்படம் விஜyயின் திரை உலக வாழ்க்கையிலேயே மிக மோசமான படமாக இருக்கும் என விஜய் ரசிகர்களின் செயல்களில் இருந்து தெரிய வருகிறது.

 

Trending

Exit mobile version