சினிமா செய்திகள்
விஜய் தேவரகொண்டாவுடன் நடிக்க ஆசை – பிரியா வாரியர்
விஜய் தேவரகொண்டாவுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட பிரியா வாரியர் அவருடன் நடிக்க ஆசைப்படுவதாக கூறியுள்ளார்.
ஒரு அடார் லவ் படத்தின் மூலம் அறிமுகமானவர் பிரியா வாரியர். தற்போது தெலுங்கில் சந்திர சேகர் எலட்டி இயக்கத்தில் நிதீனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
அந்த படத்திற்காக ஐதராபாத்தில் தங்கியிருக்கும் பிரியா வாரியர் டோலிவுட்டில் உள்ள பிரபல நடிகர்களுடன் போட்டோ எடுத்து அதை தனது இணையப்பக்கத்தில் பதிவிட்டார். அதேபோல் விஜய் தேவரகொண்டாவுடன் போட்டோ எடுத்துக்கொண்ட பிரியா வாரியர் அந்த போட்டோவயும் இணையத்தில் பதிவிட்டு, விஜய் தேவரகொண்டாவுடன் நடிக்க ஆசைப்படுகிறேன் என்றும் கூறியுள்ளார்.