தமிழ்நாடு

விஜய்யின் மேல்முறையிட்டு மனு: நாளை விசாரணை என தகவல்!

Published

on

நடிகர் விஜய் ரோல்ஸ் ராய் கார் வரிவிதிப்பு வழக்கில் மேல்முறையீடு செய்த நிலையில் இந்த மேல்முறையீட்டு மனு நாளை விசாரணைக்கு வர உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

பிரபல நடிகர் விஜய் இங்கிலாந்து நாட்டிலிருந்து ரோல்ஸ் ராய் என்ற காரை இறக்குமதி செய்தார். இந்த காருக்கு நுழைவு வரி விதிக்க வேண்டும் என அரசு கூறியதை அடுத்து அதனை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தனிநீதிபதி விஜய்யின் மனுவை தள்ளுபடி செய்ததோடு, அவருக்கு ரூபாய் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்தார். அதுமட்டுமின்றி விஜய் குறித்து ஆட்சேபனைக்குரிய சில கருத்துக்களையும் தெரிவித்தார்.

இந்த நிலையில் தனக்கு விதிக்கப்பட்ட ஒரு லட்ச ரூபாய் அபராதத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் தன்னை பற்றி குறிப்பிட்ட ஆட்சேபத்துக்குரிய கருத்தை நீக்க வேண்டும் என்றும் கோரி விஜய் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு மனு சமீபத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் வரி குறித்த வழக்கை விசாரிக்கும் அமர்வு இந்த வழக்கை விசாரணை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில் நாளை வரி குறித்த அமர்வு இந்த வழக்கை விசாரணை செய்ய உள்ளதாக தகவல்கள் வெளிவந்தன. துரைசாமி மற்றும் ஹேமலதா ஆகிய இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு நாளை விஜய்யின் மேல்முறையீட்டு மனுவை விசாரணை செய்ய இருப்பதாகவும் விரைவில் இந்த வழக்கின் தீர்ப்பு அளிக்கப்படும் என்று கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Trending

Exit mobile version