தமிழ்நாடு

நடிகர் விஜய்க்கு அபராதம் விதிக்க வேண்டும்: தமிழக அரசு வாதம்!

Published

on

நடிகர் விஜய்க்கு அபராதம் விதித்து அவரது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என நீதிமன்றத்தில் தமிழக அரசின் வணிக வரித் துறை வாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது .

கடந்த 2005ஆம் ஆண்டு அமெரிக்காவில் இருந்து நடிகர் விஜய் 63 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பிஎம்டபிள்யூ எக்ஸ்5 இறக்குமதி செய்தார். இந்த காருக்கு நுழைவு வரி செலுத்த தமிழக அரசின் வணிகவரித்துறாஇ உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து விஜய் தாக்கல் செய்த மனு விசாரணையின்போது நீதிமன்றத்தின் உத்தரவுப்படி விஜய் தரப்பில் நுழைவு வரி செலுத்தப் பட்டது. இந்த நிலையில் வரி செலுத்தப்படாத இடைப்பட்ட காலத்திற்கான வட்டித்தொகை தொகை 30 லட்சத்து 23 ஆயிரத்து 650 ரூபாய் செலுத்த வேண்டும் என வணிகவரித் துறை உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து நீதிமன்றத்தில் விஜய் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணையின்போது தமிழக அரசின் வணிக வரித் துறை வழக்கறிஞர் வாதிடும்போது, ‘டிசம்பர் 2005 முதல் செப்டம்பர் 2021 வரை 189 மாதங்களுக்கான 2 சதவீதமாக வட்டியாக 30 லட்சத்து 20 ஆயிரத்து 601 செலுத்தும்படி உத்தரவிட்டதாகவும் இதற்கு சட்டத்திற்கு அதிகாரம் ஒன்று என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் நீதிமன்றம் என்ன தீர்ப்பு அளிக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

seithichurul

Trending

Exit mobile version