சினிமா செய்திகள்

எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க கூடாது: விஜய் கார் வழக்கு குறித்து ஐகோர்ட் உத்தரவு!

Published

on

விஜய் இறக்குமதி செய்த வெளிநாட்டு காருக்கு அபராதம் விதிக்கப்பட்ட நிலையில் அபராதம் விஷயத்தில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என வணிக வரித்துறைக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் விஜயை அமெரிக்காவிலிருந்து பிஎம்டபிள்யூ என்ற சொகுசு காரை 2015ஆம் ஆண்டு இறக்குமதி செய்தார். இந்த காருக்கு அதிகப்படியான வரி விதிக்கப்பட்டிருந்த நிலையில் வரியை குறைக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நடந்து கொண்டிருந்தபோதே சொகுசு காருக்கு அவர் வரி செலுத்துவதற்கு தாமதம் செய்ததாக 400% அளவிற்கு வணிகவரித்துறை அபராதம் விதித்தது. இந்த அபராதத்தை எதிர்த்து விஜய் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் புதிய வழக்கு ஒன்றை பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது அபராத தொகை வசூல் செய்யும் வழக்கில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என வணிகவரித்துறை சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த வழக்கின் விசாரணை முடியும் வரை அபராதம் வசூலிக்க எந்தவிதமான கட்டாய நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்றும் கட்டாய நடவடிக்கை எடுக்கப்படாமல் இருப்பதை வணிகவரித்துறை உறுதி செய்ய வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இந்த உத்தரவால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version