சினிமா செய்திகள்

ப்ளூசட்டை மாறனிடம் இப்படியொரு உதவி கேட்ட விஜய்!

Published

on

தமிழ் டாக்கீஸ் எனும் யூடியூப் சேனலில் சினிமா விமர்சகராக இருக்கும் ப்ளூசட்டை மாறன், படங்களை கழுவி ஊற்றி நெகட்டிவ் பப்ளிசிட்டி மூலம் பிரபலமானவர்.

அவருடன் பல இயக்குநர்கள் நேரடி சண்டை மற்றும் போலீசில் புகாரும் கொடுத்துள்ளனர். இந்நிலையில், ப்ளூசட்டை மாறன் இயக்குநராக அறிமுகமாகவுள்ளார்.

அவர் இயக்கும் புதிய படத்தில் தன்னை ஒளிப்பதிவாளராகவோ உதவி இயக்குநராகவோ சேர்த்துக் கொள்ளும்படி கோலிசோடா, பத்து என்றதுக்குள்ள படங்களை இயக்கிய இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளருமான விஜய் மில்டன் ட்விட்டரில் கோரிக்கை வைத்துள்ளார்.

விஜய் மில்டன் இயக்கிய பத்து என்றதுக்குள்ள படத்தை மாறன் கழுவி ஊற்றியதால், அப்போது அவர் மீது பயங்கர கோபத்தில் இருந்த விஜய் மில்டன் கடும் சண்டை பிடித்தது குறிப்பிடத்தக்கது.

இது கலாய்க்கும் நோக்கத்துடன் போட்ட ட்விட்டர் பதிவாகவே பார்க்கப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version