தமிழ்நாடு

விஜய் மேல்முறையீடு வழக்கு இன்று விசாரணை!

Published

on

நடிகர் விஜய் வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு செலுத்தவேண்டிய வரி குறித்த வழக்கில் தீர்ப்பு சமீபத்தில் வெளியான நிலையில் நடிகர் விஜய்யின் மனு தள்ளுபடி செய்யப்படுவதாகவும் அது மட்டுமின்றி அவருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதாகவும் தனிநீதிபதி தீர்ப்பளித்தார். மேலும் அவர் விஜய் குறித்த சில விமர்சனங்களையும் வைத்தார்.

இதனை அடுத்து இந்த தீர்ப்பை எதிர்த்தும், விஜய் குறித்து அவர் தெரிவித்திருந்த ஆட்சேபத்துக்குரிய கருத்துக்களை நீக்கக் கோரியும் விஜய் சமீபத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு மனுவை சுந்தரேஷ் மற்றும் மஞ்சுளா ஆகிய இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்க உள்ளதாக கூறப்பட்டது. இந்த நிலையில் இன்று இந்த வழக்கின் விசாரணை நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இன்றைய விசாரணைக்கு பின் விஜய்க்கு சாதகமாக உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் மஞ்சுளா ஆகியோர் தீர்ப்பு அளிப்பார்களா? விஜய் குறித்து தனி நீதிபதி கூறிய கருத்தை நீக்க சொல்வார்களா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்,

முன்னதாக வரி என்பது நன்கொடை அல்ல என்றும், ஒவ்வொரு குடிமகனும் செய்ய வேண்டிய பங்களிப்பு என்றும் ரீல் நடிகர்களாக இல்லாமல் ரியல் நடிகராகவும் இருக்க வேண்டும் என்றும் தனி நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த தீர்ப்புக்கு ஏற்கனவே முன்னாள் நீதிபதிகள், அரசியல் பிரமுகர்கள் ,திரையுலக பிரமுகர்கள் ஆகியோர் விஜய்க்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version