சினிமா

பிச்சைக்காரன் 2 விமர்சனம்: கதையிலாவது பணக்காரனாக இருந்திருக்கலாம்.. பாவம் விஜய் ஆண்டனி!

Published

on

இயக்குநர் சசி இயக்கத்தில் கடந்த 2016ம் ஆண்டு விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான பிச்சைக்காரன் திரைப்படம் ஹிட் அடித்த நிலையில், பிச்சைக்காரன் 2 அறிவிப்பு வெளியானதும் ரசிகர்கள் எதிர்பார்க்கத் தொடங்கினர்.

மேலும், இந்த படத்தை விஜய் ஆண்டனியே முதல் முறையாக இயக்கப் போகிறார் என்றதும் அந்த ஹைப்பை அதிகரித்தது. பிச்சைக்காரன் 2 படப்பிடிப்பின் போது விஜய் ஆண்டனிக்கு ஏற்பட்ட அந்த எதிர்பாராத விபத்து அவர் மீது பரிதாபத்தை உண்டு பண்ணியது.

#image_title

அதே பரிதாபம் தான் இன்று படத்தை பார்த்த பலருக்கும் ஏற்பட்டுள்ளது. விஜய் ஆண்டனி எழுத்து, இயக்கம், இசை, எடிட்டிங், டபுள் ஆக்‌ஷன் நடிப்பு என அவர் கஷ்டப்பட்டதை மட்டுமே பார்த்து நாமும் கஷ்டப்பட தயாராக இருந்தால் தாராளமாக இந்த பிச்சைக்காரன் 2வை தியேட்டருக்குச் சென்று பார்க்கலாம்.

மற்றபடி முதல் பாகத்தின் கால்வாசி அளவுக்கு கூட திரைக்கதை மற்றும் மேக்கிங்கிற்கு விஜய் ஆண்டனி செலவு செய்யவே இல்லை.

இயக்குநர் சசியின் மூளையை மாற்றி விஜய் ஆண்டனி வைத்து இந்த படத்தை இயக்கி இருந்தால் பிச்சைக்காரன் 2 ஒரு வேளை சூப்பர் ஹிட் அடித்திருக்குமோ என்னவோ தெரியவில்லை என்றே தியேட்டரில் ரசிகர்கள் கலாய்க்கும் அளவுக்கு ஏகப்பட்ட லாஜிக் ஓட்டைகள், க்ரீன் மேட் கீறல்கள் என ரசிகர்களை பாடாய் படுத்தி விடுகின்றன.

பெரிய பணக்காரரான விஜய் குருமூர்த்தியின் மூளையை  அகற்றிவிட்டு பிச்சைக்காரன் சத்யாவின் மூளையை வைக்க பணக்காரனாக மாறும் பிச்சைக்காரன் நாட்டிற்கும் தொலைந்து போன தனது தங்கையை தேடுவதற்கும் என்ன செய்கிறான் என்பது தான் இந்த பிச்சைக்காரன் 2 படத்தின் கதை.

#image_title

மகதீரா படத்தில் வில்லனாக நடித்த தேவ் கில் மெயின் வில்லனாக மிரட்டுகிறார். ஹீரோயின் காவ்யா தாப்பார் சில காட்சிகளில் கவர்ச்சியாகவும் பல இடங்களில் காணாமலும் போய் விடுகிறார். கிளைமேக்ஸில் மீண்டும் வந்து ஒரு சில வெயிட்டான காட்சிகளில் நடித்துள்ளார்.

ராதா ரவி, ஹரிஷ் பெரடி, ஒய் ஜி மகேந்திரன், யோகி பாபு உள்ளிட்ட பலர் வந்து செல்கின்றனர் தவிற எந்தவொரு அழுத்தமான கதாபாத்திரமும் அவர்களுக்கு வழங்கப்படவில்லை என்பது தான் உண்மை.

முதல் பாகத்தில் பாடல்கள், காமெடி, சென்டிமெண்ட்  என பல விஷயங்கள் கவர்ந்தன. இரண்டாம் பாகத்தில் தங்கச்சி சென்டிமென்ட் மற்றும் ஏழைகளுக்காக பணக்காரர் உடம்பில் இருக்கும் பிச்சைக்காரர் சத்யாவின் மூளை செய்யும் ஆன்டி பிகில் கான்செப்ட் என எதுவுமே பெரிதாக ஒட்டவில்லை.

இந்த குறைகளை அடுத்த படத்தில் விஜய் ஆண்டனி சரி செய்துக் கொண்டு நல்ல தரமான இயக்குநராக கம்பேக் கொடுப்பார் என நிச்சயம் எதிர்பார்க்கலாம்.

ரேட்டிங் – 2.5/5.

author avatar
seithichurul

Trending

Exit mobile version