சினிமா செய்திகள்

சென்னையில் கோலாகலமாக நடைபெற்ற கொலைகாரன் வெற்றி விழா!

Published

on

விஜய் ஆண்டனி – அர்ஜுன் நடிப்பில் கடந்த வாரம் வெளியான கொலைகாரன், மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து, அந்த படத்திற்கான வெற்றி விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.

இந்த வெற்றி விழாவில் நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி, நடிகர் அர்ஜுன் மற்றும் படத்தின் நாயகி ஆஷிமா நர்வால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சஸ்பெக்ட் எக்ஸ் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்கான கொலைகாரன் படம், த்ரில்லர் வகை படங்களில் மிகச் சிறப்பாக வெளிவந்துள்ளது. சஸ்பெக்ட் எக்ஸ் படத்தின் தழுவலாகத் தான் மலையாளத்தில் த்ரிஷ்யம், தமிழில் பாபநாசம் உள்ளிட்ட பல படங்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வந்த விஜய் ஆண்டனிக்கு கொலைகாரன் வெற்றியை கொடுத்திருப்பதில் மகிழ்ச்சி அடைந்துள்ளார். அடுத்ததாக அவர் நடிப்பில் தமிழரசன் படம் தயாராகி வருகிறது.

seithichurul

Trending

Exit mobile version