வைரல் செய்திகள்

எம். ஜி.ஆர்- ஜெயலலிதாவாக நடிகர் விஜய்- சங்கீதா..!- வைரலாகும் மதுரை போஸ்டர்

இந்த இரண்டு போஸ்டர்களும் தற்போது சமுக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

Published

on

மதுரையில் பல கவர்ச்சிகர வாசகங்கள், வசனங்கள், எடிட்கள் உடனான போஸ்டர்கள் ஒட்டப்படுவது வழக்கம்.

இந்த முறை மாஸ்டர் திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளி வருவதை அடுத்து மதுரை விஜய் ரசிகர்கள் நடிகர் விஜய்-க்காக ஒட்டியுள்ள போஸ்டர்கள் வைரலாகி வருகின்றன. நடிகர் விஜய் அமெரிக்காவின் புதிய அதிபர் ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் உடன் இணைந்து இருப்பது போன்ற புகைப்பட போஸ்டரை மதுரை நகர் முழுவதுமாக ஒட்டியுள்ளனர்.

இந்த போஸ்டரில் ‘தளபதி வந்தால் தமிழ்நாடு அமெரிக்கா’ ஆகிவிடும் என்பது போன்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. மற்றொரு போஸ்டரில் நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா ஆகிய இருவரையும் இணைத்து எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா தோற்றத்தில் எடிட் செய்து போஸ்டர் ஒட்டியுள்ளனர். அதில் ‘நாங்கள் கண்ட புரட்சித் தலைவரே புரட்சித் தலைவியே’ என்று அச்சிடப்பட்டுள்ளது.

இந்த இரண்டு போஸ்டர்களும் தற்போது சமுக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

Trending

Exit mobile version