சினிமா செய்திகள்

விஜய்-லோகேஷ் கனகராஜ் இணையும் திரைப்படம் ‘மாஸ்டர் 2’ படமா?

Published

on

தளபதி விஜய்யின் அடுத்த திரைப்படத்தை அதாவது ’தளபதி 67’ திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கயிருக்கிறார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. அதுமட்டுமின்றி மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர் லலித் இந்த படத்தை தயாரிக்க இருப்பதாகவும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

எனவே மாஸ்டர் படத்தின் குழுவினர் மீண்டும் இணைவதால் இந்த படம் மாஸ்டர் படத்தின் இரண்டாம் பாகமாக இருக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மாஸ்டர் படத்தின் இரண்டாம் பாகத்தின் கதையை முதல் பாகம் எடுக்கும் போதே லோகேஷ் கனகராஜ் மனதில் வைத்திருந்ததாகவும், அந்த கதையின் ஒன்லைனை விஜய்யிடம் கூறிய போது கண்டிப்பாக இந்த படத்தை இன்னொரு சமயத்தில் பண்ணலாம் என விஜய் உறுதி அளித்ததாகவும் தெரிகிறது.

தற்போது விஜய், லோகேஷ் கனகராஜ் மீண்டும் இணையும் காலம் கூடி வந்ததை அடுத்து ’மாஸ்டர் 2’ படத்தைதான் படக்குழுவினர் எடுக்க முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் வரை பொறுமை காப்போம்.

 

seithichurul

Trending

Exit mobile version