தமிழ்நாடு

மேல்முறையீடு செய்ய போகிறோம்: விஜய் வழக்கறிஞர் பேட்டி

Published

on

தீர்ப்பு அளித்த நீதிபதியின் ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போகிறோம் என விஜய் வழக்கறிஞர் குமரேசன் அவர்கள் தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

சமீபத்தில் விஜய் வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு வரி செலுத்துவது குறித்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி, விஜய் குறித்து ஆட்சேபனைக்குரிய கருத்து கூறியதாக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்

இந்த நிலையில் நீதிபதி கூறிய ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக விஜய்யின் வழக்கறிஞர் குமரேசன் அவர்கள் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:

வரி கட்ட கூடாது என்ற நோக்கம் இந்த வழக்கில் துளியும் இல்லை. வரிவிதிப்பில் நீதிமன்றத்தின் தீர்ப்பும் அரசின் அணுகுமுறையும் முரண்பட்ட இருந்ததால் இந்த வழக்கு தொடரப்பட்டது. அப்போதே நுழைவு வரி கட்டித்தான் ஆகவேண்டும் என்று உத்தரவு இருந்திருந்தால் எந்த ஆட்சேபனையும் இன்றி விஜய் அவர்கள் வரி கட்டி இருப்பார். சமூகத்தில் தனக்குரிய செல்வாக்கை பயன்படுத்தி வரி விதிப்பில் இருந்து யாரும் விலகி ஓட வெளியேற முடியாது, அது விஜய் அவர்களுக்கு நன்றாக தெரியும்.

ஆனால் இப்போது நீதிபதி ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை தெரிவித்து அபராதம் விதித்துள்ளார். தீர்ப்பில் எங்களுக்கு இருக்கும் ஆட்சேபனைக்குரிய பகுதிகளை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இருக்கிறோம். இந்த மேல்முறையீடு கூட வரி கட்ட கூடாது என்பதற்காகவோ அல்லது அபராதம் செலுத்த கூடாது என்பதற்காகவும் கிடையாது. ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை எதிர்த்து மேல்முறையீடு. இவ்வளவு காரசாரமான தமது கருத்துக்களை தெரிவிக்க கூடாது என்பதுதான் எங்கள் வாதம். அதனை சட்டப்படி எதிர்கொள்வோம்’ என்று அவர் தெரிவித்துள்ளார்

seithichurul

Trending

Exit mobile version