சினிமா செய்திகள்

தப்பு என் மீதுதான்: ‘பீஸ்ட்’ முழு தோல்விக்கும் பொறுப்பேற்று கொண்டாரா விஜய்?

Published

on

‘பீஸ்ட்’ படத்தின் முழு தோல்விக்கு நானே காரணம் என விஜய் பொறுப்பை ஏற்றுக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஜய் நடிப்பில் நெல்சன் இயக்குவதாக இருந்த கதையை வேறு என்றும் ஆனால் விஜய்தான் கதையை மாற்றி இந்த படத்தை முதலில் எடுப்போம் என்று கூறியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன .

கோலமாவு கோகிலா, டாக்டர் பாணியில் ஒரு காமெடி கதையை த்தான் விஜய்க்கு முதலில் நெல்சன் கூறியதாகவும் ஆனால் முழுக்க முழுக்க காமெடி கதை வேண்டாம் ஆக்ஷன் கலந்து வேண்டும் என்று கூறிய விஜய், மால் ஹைஜாக் கதையைக் கூறி அதை டெவலப் செய்ய கூறியதாக தெரிகிறது .

இது போன்ற கதை தனக்கு செட் ஆகாது என நெல்சன் கூறியும் உங்களால் முடியும் செய்யுங்கள் என விஜய் ஊக்கப்படுத்தினார் என்றும் அதனை அடுத்து படம் உருவானது என்றும் கூறப்படுகிறது .

நெல்சன் கூறியபடி டார்க் காமெடி கதையை எடுத்திருந்தால் இந்த படம் சூப்பர் ஹிட் ஆகியிருக்கும் ஆனால் விஜய் ஏற்படுத்திய மாற்றம் காரணமாக தற்போது ‘பீஸ்ட்’ படம் படுதோல்வி அடைந்து இருப்பதாகவும் கூறப்படுகிறது .

இந்நிலையில் சமீபத்தில் நெல்சனை சந்தித்த விஜய் இந்த படத்தின் தோல்விக்கு முழு பொறுப்பை நான் ஏற்றுக் கொள்கிறேன் மீண்டும் நீங்கள் கூறிய கதையை விரைவில் படமாக்குவோம் என்று ஆறுதல் கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

 

seithichurul

Trending

Exit mobile version