சினிமா செய்திகள்

தளபதி ‘விஜய் 65’ படத்தின் ஹீரோயின் இவர்தான்!

Published

on

மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக விஜய், நெல்சன் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இன்னும் பெயர் வெளியிடப்படாத இந்தப் படத்தைத் தற்போது, ‘விஜய் 65’ என்று அழைக்கப்பட்டு வருகிறது. இந்தப் படத்தை சட் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிலையில் இந்தப் படத்தில் யார் கதாநாயகியாக நடிப்பார் என்பது குறித்த தகவல் வெளி வந்துள்ளது.

விஜய் 65-க்கான ஷூட்டிங் அடுத்த மாதம் தொடங்க உள்ளது.  ரஷ்யாவில் முதல் கட்ட படப்பிடிப்பும், சென்னையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பும் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வெளிவந்துள்ள தகவலின்படி இந்த படத்தில் நாயகியாக ராஷ்மிகா மந்தனா அல்லது பூஜா ஹெக்டே ஆகிய இருவரில் ஒருவர் நடிப்பார் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது வெளிவந்திருக்கும் புதிய தகவலின்படி இந்த படத்தின் நாயகி கேரக்டருக்கு தமன்னாவிடம் படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அனேகமாக அவர் ஒப்பந்தமாக அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

திடீர் திருப்பமாக தளபதி 65 படத்தில் தமன்னா நடிக்க இருப்பது ஆச்சரியத்தை அளித்துள்ள்து. ஏற்கனவே விஜய்யுடன் சுறா என்ற படத்தில் தமன்னா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version