சினிமா செய்திகள்

விஜய்-க்கு வில்லனாகும் விஜய் சேதுபதி… சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Published

on

நடிகர் விஜய்யின் 64வது திரைப்படத்தில் அவருக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிப்பது உறுதியாகியுள்ளது.

விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகியுள்ள பிகில் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. மறுபக்கம் விஜய்யின் 64வது படத்தை மாநகரம், கைதி உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ள லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார் என்று அறிவிப்புகள் வெளியாகியிறுந்தது.

இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ள படத்திற்கான நடிகர்கள், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது.

அதில் முக்கியமான தகவல் என்னவென்றால் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி தேர்வு செய்யப்பட்டுள்ளது என்கிறார்கள்.

மேலும் இந்த படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி நடிக்க 10 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.

Trending

Exit mobile version