சினிமா செய்திகள்

வாவ்! கம்ப்ளீட் மிரட்டலாக களமிறங்கும் தளபதி 63!

Published

on

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி 63 திரைப்படம் கம்ப்ளீட் மிரட்டலாக உருவாகி உள்ளதாக நடிகர் விவேக் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை இட்டு, விஜய் ரசிகர்களுக்கு இப்போதே பிறந்த நாள் கொண்டாட்டத்தை ஆரம்பித்து வைத்து விட்டார்.

நடிகர் விஜய், தெறி, மெர்சல் படங்களுக்கு பிறகு மீண்டும் அட்லியுடன் கைகோர்த்துள்ள படம் தளபதி 63. இந்த படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் நடிகர் விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22ம் தேதி வெளியாகும் என ரசிகர்கள் மரண வெயிட்டிங்கில் காத்துக் கொண்டு இருக்கின்றனர்.

இந்நிலையில், இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள நடிகர் விவேக், தளபதி 63 கம்ப்ளீட் மிரட்டலாக உருவாகியிருப்பதாக தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த ட்வீட்டை பார்த்த தளபதி ரசிகர்கள், இந்த தீபாவளியையும் தளபதி தீபாவளியாக தெறிக்க விட தற்போதே ஆயத்தமாகி விட்டார்கள்.

Trending

Exit mobile version