சினிமா செய்திகள்

இளைப்பாறுங்கள் சின்னக்கலைவாணரே: விக்னேஷ் சிவன் நெகிழ்ச்சி டுவிட்

Published

on

நடிகர் விவேக் அவர்களின் மறைவு குறித்து தனது டுவிட்டரில் டுவிட் ஒன்றை பதிவு செய்த பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் அவர்கள் ’இளைப்பாறுங்கள் சின்ன கலைவாணரே’ என்று பதிவு செய்துள்ளார். அவர் தனது ட்வீட்டில் மேலும் கூறியிருப்பதாவது:

சமூக சீர்திருத்த கருத்துகளை அழுத்தமாக பேசிய குரல் இனி நம்மிடையே இல்லை என்பதை ஏற்க மனம் மறுக்கிறது. விஐபி பட நாட்களில் உங்களுடன் பழகிய நினைவுகள், நீங்கள் நட்ட மரங்களை போல் என்றும் என் மனதில் பசுமையாக இருக்கும்.

நாம் இருவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என பல சந்தர்ப்பங்களில் பேசி இருக்கிறோம். ஆனால் அது இறுதிவரை நிறைவேறாமலே போனது என் வாழ்நாளில் பேரிழப்பு. இளைப்பாறுங்கள் சின்ன கலைவாணரே’ என்று கூறியுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

 

 

Trending

Exit mobile version