சினிமா செய்திகள்

விஜய்-தோனி சந்திப்பால் கோபமடைந்த இயக்குனர் விக்னேஷ் சிவன்: காட்டமான டுவிட்!

Published

on

திரையுலகில் எப்பொழுதாவது நடைபெறும் அபூர்வ சந்திப்பு இன்று நடந்தது என்பது அனைவரும் அறிந்ததே. அதுதான் தல தோனி மற்றும் தளபதி விஜய் சந்திப்பு.

கிரிக்கெட் உலகில் முடிசூடா மன்னனாக இருந்த தோனியும் தமிழ் திரையுலகில் முடிசூடா மன்னனாக இருந்து வரும் விஜய்யும் சந்தித்தது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த சந்திப்பு குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் தோனி மற்றும் விஜய் ஆகிய இருவருக்கும் மத்தியில் இயக்குனர் நெல்சன் திலிப்குமர் இருக்கும் புகைப்படமும் வைரல் ஆனது. நெல்சன் கொடுத்து வைத்தவர் என்றும் அவர் அதிர்ஷ்டக்காரர் என்றும் விஜய் ரசிகர்கள் மற்றும் தல தோனி ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இந்த சந்திப்பு குறித்து சற்றே செல்ல கோபமாக ஒரு டுவிட்டை பதிவு செய்துள்ளார். அந்த டுவிட்டில் இந்த சந்திப்பு நடக்கும் முன்பே என்னிடம் ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம். எனக்கு டெம்பரேச்சர் 274 டிகிரி உயர்ந்து விட்டது. இந்த புகைப்படத்தில் நானும் இருப்பது போல் போட்டோஷாப் செய்தாவது அனுப்பு என்று விக்னேஷ் சிவன் நெல்சனிடம் இடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

இயக்குனர்கள் நெல்சன் திலீப்குமார் மற்றும் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் கடந்த பல ஆண்டுகளாக நெருங்கிய நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version