சினிமா செய்திகள்

அஜித் 62’ படத்தால் 20 கோடி ரூபாய் வருமானம் பார்த்த விக்னேஷ் சிவன் – நயன்தாரா ஜோடி!

Published

on

அஜித் 62 படத்தால் விக்னேஷ் சிவன் – நயன்தாரா ஜோடிக்கு 20 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அஜித் நடித்த வலிமை திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த நிலையில் அஜித்தின் 61 வது படத்தை எச் வினோத் இயக்க இருக்கிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடதக்கது.

இந்த நிலையில் அஜித்தின் 62 வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்க இருக்கிறார் என்பதும் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பது தெரிந்ததே .

லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் அஜீத் ஜோடியாக நயன்தாரா நடிக்கவுள்ளார் என்பதும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் நயன்தாராவின் சம்பளமாக 10 கோடியும் விக்னேஷ் சிவன் சம்பளம் ரூ.10 கோடி எனவும் பேசப்பட்டுள்ளதாம். எனவே இந்த ஒரு படத்தில் நயன்தாரா விக்னேஷ் சிவன் ஜோடிக்கு ரூபாய் 20 கோடி வருமானம் கிடைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது .

விக்னேஷ் சிவன் இதுவரை ஒரு கோடி முதல் ரூ3 கோடி வரை மட்டுமே சம்பளம் வாங்கிக்கொண்டு இருந்த நிலையில் அவரது ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெரும் என்ற எதிர்பார்ப்பில் லைகா நிறுவனம் ரூ.10 கோடி கொடுக்க ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.

 

seithichurul

Trending

Exit mobile version