சினிமா

ஹேப்பி பர்த்டே தங்கமே என் எல்லாமே!.. நயன்தாராவுக்கு வாழ்த்து கூறிய காதலர்….

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் முதன்மையாக இருப்பவர் நயன்தாரா. தமிழ் சினிமாவில் இவருக்குதான் அதிக சம்பளம் வழங்கப்படுகிறது. ரூ.5 கோடி முதல் 6 கோடி வரை சம்பளம் கொடுக்கப்படுகிறது.

ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்பட்டு வருகிறார். இவர் நடித்தாலே படம் ஹிட்தான் என்கிற நிலையை அவர் உருவாக்கியுள்ளார். தற்போது அவரின் காதலர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்கிற படத்தில் நடித்து வருகிறார்.

nayan

இவர் நானும் ரவுடிதான் படத்தில் நடித்தபோது அப்பட இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதல் ஏற்பட்டு அந்த காதல் இப்போது வரை நீடித்து வருகிறது.

இன்று அவர் தனது 37வது பிறந்தநாளை அவர் கொண்டாடுகிறார். எனவே, திரையுலகினரும், ரசிகர்களும் இன்று காலை முதலே அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

nayan

இந்நிலையில், அவரின் காதலர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவருக்கு கூறியுள்ள பிறந்தநாள் வாழ்த்தில் ‘பிறந்தநாள் வாழ்த்துக்கள் என் கண்மணி, தங்கமே என் எல்லாமே. உன் வாழ்க்கை அன்பாலும், காதலும் நிரம்பியுள்ளது. இது இப்படியே தொடர கடவுள் உனக்கு அருள்புரிவார்’ என அவர் பதிவிட்டுள்ளார்.

nayan

Trending

Exit mobile version