சினிமா செய்திகள்

விஜய் சேதுபதியின் புதிய சாதனை… கொண்டாடும் விக்னேஷ் சிவன்- வைரல் வீடியோ

Published

on

நடிகர் விஜய் சேதுபதி திரை துறையில் கால் பதித்து பத்து ஆண்டுகள் நிறைவடைவதை விக்னேஷ் சிவன் புது முறையில் கொண்டாடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் சேதுபதி திரையில் தோன்றிய 10-ம் ஆண்டு கொண்டாடப்படுகிறது. இதற்கு வாழ்த்துத் தெரிவிக்கும் வகையில் இயக்குநர் விக்னேஷ் சிவன் ஒரு சர்ப்ரைஸ் அளித்துள்ளார். விஜய் சேதுபதியின் ஹிட் ஆன வசனங்களை எல்லாம் தேர்ந்தெடுத்து அவற்றை ஒரு வீடியோவாக கோர்த்து வெளியிட்டுள்ளார் விக்னேஷ் சிவன்.

இந்த வீடியோ தற்போது சமுக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இயக்குநர் விக்னேஷ் சிவன் முதன்முதலாக நானும் ரெளடிதான் படத்துக்காக விஜய் சேதுபதியுடன் இணைந்தார். தற்போது இதே கூட்டணியினர் மீண்டும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் தற்போது இணைந்துள்ளார்கள்.

Trending

Exit mobile version