சினிமா செய்திகள்

ரஜினியின் தர்பார் படத்தில் விக்னேஷ் சிவன்?

Published

on

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி – நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் தர்பார் படத்தில் விக்னேஷ் சிவன் ஒரு பாடல் எழுத உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட படத்திற்கு முதன்முறையாக அனிருத் இசையமைத்திருந்தார். அடுத்ததாக ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் தர்பார் படத்திலும் அனிருத்தே இசையமைக்கிறார்.

பேட்ட படத்தில் விக்னேஷ் சிவனுக்கு பாடல் எழுத வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்நிலையில், தர்பார் படத்தில் விக்னேஷ் சிவனின் காதலி நயன்தாரா நாயகியாக நடிப்பதால், விக்னேஷ் சிவன் ஒரு பாடல் எழுதுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இதனை உறுதி செய்யும் விதமாக சமீபத்தில் மும்பை சென்ற விக்னேஷ் சிவன் ரஜினியுடம் எடுத்துக் கொண்ட புகைப்படமும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version