சினிமா செய்திகள்

காவல்துறையில் பதவி உயர்வு பெற்ற ‘பிகில்’ பட வில்லன்… இவருக்கு இப்படி ஒரு பின்னணியா?

Published

on

தளபதி விஜய் நடித்த பிகில் படத்தில் வில்லன் ஆக நடித்த விஜயன் என்பவருக்கு நிஜ வாழ்க்கையில் காவல்துறையில் உயர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

பிகில் படத்தில் கால்பந்து வீரராக நடித்த விஜயன் என்பவர் நிஜ வாழ்க்கையிலும் ஒரு கால்பந்து வீரர் என்பது அந்தப் படம் வெளியான போதே அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம் தான். 2000-ம் ஆண்டு முதல் 2004-ம் ஆண்டு வரையில் இந்திய கால்பந்து அணியின் கேப்டன் ஆக இருந்தவர். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் இந்தியக் கால்பந்து உலகின் பீலே என அழைக்கப்படுபவர் விஜயன்.

கால்பந்து விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் கேரள காவல்துறையில் போலீஸ் அதிகாரியாகப் பணியில் சேர்ந்தார். இடையில் பல மலையாளப் படங்களிலும் சில தமிழ்ப் படங்களில் அவ்வப்போது நடித்து வந்தார். திமிரு, கொம்பன், பிகில் போன்ற படங்களில் கவனம் ஈர்க்கும் கதாபாத்திரங்களில் நடித்து புகழ்பெற்றார்.

தற்போது கேரள காவல்துறை விஜயனுக்கு துணை கமாண்டண்ட் என்னும் பதவி உயர்வை வழங்கி கவுரவித்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பை விஜயன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Trending

Exit mobile version