செய்திகள்

ஜல்லிக்கட்டு போட்டியில் காளை முட்டி பார்வையாளர் பலி…திருச்சியில் சோகம்….

Published

on

மாடுகளை வைத்து விளையாடும் ஜல்லிக்கட்டு போட்டி என்பது தமிழகத்தில் பல வருடங்களாகவே நடக்கும் நிகழ்ச்சியாகும். இடையில் சில தடைகள் வந்து ஒரு வருடம் மட்டும் இந்த போட்டி நடைபெறவில்லை. அதன்பின் சென்னையில் மெரினா கடற்கரையில் இளைஞர்கள் நடத்திய எழுச்சி போராட்டம் மூலம் அரசு ஜல்லிக்கட்டை சட்டமாக்கியது.

ஆனால், கடந்த 2 வருடங்களாக கொரோனா பரவல் அதிகமாக இருந்ததால் சில கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் தற்போது கொரோனா 3வது அலை வேகமாக பரவி வருகிறது. மேலும் ஓமிக்ரான் எனும் புதிய வைரஸ் பாதிப்பும் மக்களுக்கு ஏற்பட்டு வருகிறது. எனவே, இந்த வருடமும் வீரர்கள் 2 டோஸ் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், மதுரை அவனியாபுரம் மற்றும் அலங்காநல்லூர் ஆகிய ஊர்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், திருச்சி நாவலூர் கட்டப்பட்டு ஜல்லிக்கட்டு போட்டியில் காளை முட்டியதில் வினோத்(24) என்கிற பார்வையாளர் உயிரிழந்துள்ளார். மேலும் 4 பேர் உட்பட 26 பேர் காயமடைந்துள்ளனர்.

Trending

Exit mobile version