சினிமா செய்திகள்

கவர்ச்சி கன்னினாலும் வித்யா பாலன் தான்.. கணினி மேதைனாலும் வித்யா பாலன் தான்!

Published

on

மனித கம்ப்யூட்டர் என்றும் மெண்டல் கால்குலேட்டர் என்றும் அழைக்கப்படும் இந்தியாவின் கணித அறிஞர் சகுந்தலா தேவியின் பயோபிக் பாலிவுட்டில் உருவாகிறது. அனு மேனன் இயக்கும் இந்த படத்தில் சகுந்தலா தேவியாக வித்யா பாலன் நடிக்கவுள்ளார்.”

கவர்ச்சி கன்னி சில்க் ஸ்மிதா பயோபிக்கில் நடித்து தேசிய விருது வென்ற வித்யா பாலன், என்.டி.ஆர் படத்தில் என்.டி.ஆர் மனைவியாக நடித்திருந்தார். இந்நிலையில், தற்போது கணினி அறிஞர் சகுந்தலா தேவி கதாபாத்திரத்தில் நடிக்க கமீட் ஆகியுள்ளார்.

லண்டன், பாரீஸ், நியூயார்க் மற்றும் வெயிட்டிங் போன்ற படங்களை இயக்கிய பெண் இயக்குநர் அனு மேனன் இயக்கத்தில் உருவாகவுள்ள சகுந்தலா தேவி பயோபிக் படத்தில் வித்யா பாலன் தேர்வாகியுள்ளார். இந்த அறிவிப்பை தனது சமூக வலைதள பக்கங்களில் மகிழ்ச்சியுடன் வித்யா பாலன் பகிர்ந்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version