சினிமா

வடசென்னை படத்தின் வீடியோ

Published

on

சென்னை: வட சென்னை திரைப்படத்தில் சிம்பு தான் முதலில் நடிப்பதாக இருந்தது. ஆனால் தற்போது தனுஷ் நடிப்பில் வரும் 17-ம் தேதி வெளியாக உள்ள நிலையில் இன்று தனிக்கை செய்யப்பட்டு ‘ஏ’சான்றிதழ் பெற்றுள்ளது.

வெற்றிமாறன் இயக்கத்தில் ரெடியாகி வரும் படம் “வடசென்னை“. இதில் நாயகனாகத் தனுஷ் நடித்துள்ளார். இப்படத்தின் முக்கிய வேடத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, டேனியல், பாலாஜி, கிஷோர், இயக்குநர்கள் சமுத்திரக்கனி, அமீர், சுப்ரமண்யம் சிவா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இதற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார், வெங்கடேஷ் படத்தொகுப்பாளராகப் பணியாற்றியுள்ளார். கேங்ஸ்டர் த்ரில்லரான இதனைத் தனுஷ் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘வுண்டர்பார் ஃபிலிம்ஸ்’ மூலம் தயாரித்துள்ளார்.

இப்படம் மூன்று பாகங்களாக வெளியாகுமாம். படத்தின் பார்ட் 1-க்கான 2 டீசர்கள் மற்றும் பாடல்கள் வெளியிடப்பட்டது. வடசென்னை’யின் வரலாற்றையும், வாழ்க்கையும் பற்றி அங்கு வசிக்கும் மக்களே பேசும் ஒரு வீடியோ (தி லைஃப் இன் ‘வடசென்னை’) வெளியிடப்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version