இந்தியா

ஆன்லைன் திருமணம்: வீடியோ காலில் தாலி கட்டிய மாப்பிள்ளை!

Published

on

ஆன்லைன் என்பது தற்போது தவிர்க்க முடியாத விஷயம் ஆகிவிட்ட நிலையில் திருமணமும் தற்போது ஆன்லைனில் நடந்துள்ளதாகவும் வீடியோ காலில் மாப்பிள்ளை பெண்ணுக்கு தாலி கட்டியதும் வெளிவந்துள்ள தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வீட்டில் இருந்துகொண்டே ஆன்லைன் மூலமே வீட்டுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் வாங்கிக் கொள்கிறார்கள் என்பதும் அது மட்டுமின்றி கல்வி உள்பட அனைத்து அம்சங்களும் ஆன்லைனில் கிடைக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் திருமணம் உள்ளிட்ட சடங்குகள் மட்டுமெ நேரில் நடந்து வந்த நிலையில் இந்த கொரோனா வைரஸ் காலம் அதையும் மாற்றி விட்டது. ஏற்கனவே மாப்பிள்ளையும் பெண்ணும் ஓர் இடத்தில் திருமணம் செய்து கொள்வதை ஆன்லைன் மூலமே அவர்களது உறவினர்கள் வாழ்த்துக்களை தெரிவிக்கும் சம்பவங்களை அதிகம் பார்த்திருக்கிறோம்.

இந்த நிலையில் மாப்பிளையும் பெண்ணும் வெவ்வேறு நாட்டில் இருந்து கொண்டு ஆன்லைன் மூலமே தாலிகட்டிய சம்பவம் தற்போது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவை சேர்ந்த நிர்மல் என்பவர் நியூசிலாந்தில் பணிபுரிந்து வருகிறார். அவருக்கு கடந்த 2019ஆம் ஆண்டு திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் இந்தியாவுக்கு வருவதற்கு நிர்மலுக்கு விடுமுறை கிடைக்கவில்லை. அப்படியே விடுமுறை கிடைத்தாலும் திடீரென ஏற்பட்ட கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அவரால் இந்தியாவுக்கு வர முடியவில்லை.

இந்த நிலையில் இரண்டு வருடங்களாக நிர்மல் இந்தியாவுக்கு வர முடியாததால் ஆன்லைனிலேயே திருமணம் செய்வது குறித்து இரு தரப்பு குடும்பத்தினர் யோசித்தனர். ரிஜிஸ்தர் அலுவலகத்தில் இதுகுறித்து தகவல் கேட்டபோது அவர்களும் இந்த திருமணத்திற்கு ஒப்புக் கொண்டனர். இதனை அடுத்து வழக்கறிஞர்கள் முன்னிலையில் ரிஜிஸ்டர் அலுவலகத்தில் திருமணம் நடைபெற்றதாகவும், உறவினர்கள் சாட்சிகள் கையெழுத்து போட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனை அடுத்து வீடியோகால் மூலம் செல்ன் செல்போனில் மணமகள் தோன்ற அந்த செல்போனுக்கு நிர்மல் தாலி கட்டினார். இன்னும் ஒரு சில மாதங்களில் அவர் இந்தியா திரும்ப பெற்று திரும்பிய பின்னரே இவர்கள் மணவாழ்க்கை இனிதாக ஆரம்பமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா உள்ளிட்ட வைரஸ்கள் அதிகமாகி வரும் நிலையில் வெளிநாட்டில் இருக்கும் மாப்பிள்ளைகள் இனி இதுபோன்று தான் திருமணம் செய்து கொள்வார்கள் என்று தெரிகிறது.

seithichurul

Trending

Exit mobile version