தமிழ்நாடு

துணை வேந்தர்களை அரசே நியமிக்கும் மசோதா: இந்த மசோதாவையும் கவர்னர் தான் ஒப்புதல் அளிக்க வேண்டும்

Published

on

தற்போது துணைவேந்தர்கள் கவர்னர் நியமனம் செய்து வரும் நிலையில் இனி அரசே நியமனம் செய்ய வேண்டும் என்ற மசோதா இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

துணைவேந்தரை நியமிக்கும் அதிகாரத்தை ஆளுநருக்கு அளிக்கக்கூடாது என்றும் பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் துணைவேந்தரை நியமிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு உள்ளது என்றும் துணைவேந்தர்கள் நியமிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு இருக்க வேண்டும் என்றும் சட்டபேரவையில் முதல்வர் பேசினார்.

அரசு பல்கலைகழக துணைவேந்தர்களை தமிழ்நாடு அரசு நியமிப்பதற்கான சட்ட திருத்த மசோதாவுக்கு அதிமுக, பாஜக ஆகிய இரண்டு கட்சிகளும் ஆரம்ப கட்டத்திலேயே எதிர்ப்பு தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது .

பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் என்பது மாநில அரசின் உரிமை தொடர்பான பிரச்சினை என்று முதலமைச்சர் பேசி இந்த மசோதாவை தாக்கல் செய்தார். இருப்பினும் இந்த மசோதாவுக்கு கவர்னர் தான் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பது குறிப்பிடதக்கது.

கவர்னருக்கு உள்ள அதிகாரத்தை பறிக்கும் வகையில் இருக்கும் இந்த மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் அளிப்பாரா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. ஏற்கனவே தமிழக அரசு இயற்றிய 13 மசோதாக்களை இன்னும் கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் இருக்கும் நிலையில் இந்த மசோதாவும் கிடப்பில் போடப்படுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

 

Trending

Exit mobile version