சினிமா செய்திகள்

விஎஃப்எக்ஸ் நிபுணர் ஸ்ரீனிவாஸ் மோகனுக்கு ஆஸ்கரில் அங்கீகாரம்!

Published

on

சிவாஜி, எந்திரன், பாகுபலி, 2.0 என இந்தியாவின் பிரம்மாண்ட படங்களுக்கு கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் எனும் விஷுவல் எபெக்ட்ஸ்களை துல்லியமாக செய்த விஎஃப்எக்ஸ் நிபுணர் ஸ்ரீனிவாஸ் மோகனுக்கு ஆஸ்கர் தனது குழுவில் இணைந்து கொள்ள அழைப்பு விடுத்துள்ளது.

இதுகுறித்த அறிவிப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் ஸ்ரீனிவாஸ் மோகன் பகிர்ந்துள்ளார். இதனைக் கண்ட பாகுபலி இயக்குநர் எஸ்.எஸ். ராஜமெளலி, உலகளவில் மிக சிலரே ஆஸ்கரின் நிபுணர்கள் குழுவில் இணைக்கப்படுவார்கள். அதில், தாங்களும் ஒரு உறுப்பினராக தேர்வானது மிக்க மகிழ்ச்சி என பாராட்டி ட்வீட் செய்துள்ளார்.

இயக்குநர் ஷங்கர் தொலைபேசியில் அழைத்து தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

ஏ.ஆர். ரஹ்மான், ரசூல் பூக்குட்டி வரிசையில் மற்றொரு இந்தியருக்கு ஆஸ்கர் அங்கீகாரம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version