சினிமா செய்திகள்

மீண்டும் இணைந்த வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணி; ஆனா இது வடசென்னை பார்ட் 2 இல்லை?

Published

on

வடசென்னை படத்தின் முதல் பாகம் வெளியாகி கலவையான விமர்சனங்களுடன் சுமாராக ஓடியது. இந்நிலையில், புதிய படத்தில் தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணி இணைந்துள்ளது.

இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் மாரி 2 படம் நேற்று வெளியாகி வெற்றிநடைப் போட்டு வருகிறது. சாய் பல்லவி, கிருஷ்ணா, ரோபோ ஷங்கர், டொவினோ தாமஸ் ஆகியோர் நடித்திருந்த இப்படம் முதல் நாளில் வசூலை குவித்துள்ளது.

இந்நிலையில் தனது அடுத்த படத்திற்கான அறிவிப்பை தனுஷ் தற்போது வெளியிட்டிருக்கிறார். வடசென்னை படத்திற்கு கிடைத்த எதிர்மறையான விமர்சனங்களும், சர்ச்சைகளுமே புதிய படத்தில் இவர்கள் இணைய காரணமா? அல்லது இந்த படத்திற்கு பிறகு வடசென்னை எடுக்கப்படுமா என்பதை படக்குழு இன்னும் விளக்கவில்லை.

மேலும் இப்படத்திற்கு அசுரன் என்று தலைப்பு வைத்திருக்கின்றனர். கலைப்புலி எஸ்.தாணு இந்த படத்தை தயாரிக்கவுள்ளார். ஹீரோயின் பெயரும், மற்ற கதாபாத்திரங்களின் பெயர்களும் விரைவில் அறிவிக்கப்பட உள்ளன.

seithichurul

Trending

Exit mobile version