சினிமா செய்திகள்

வெற்றிமாறன், அமீர் இணையும் படம் குறித்த முக்கிய தகவல்!

Published

on

பிரபல இயக்குனர்கள் வெற்றிமாறன் மற்றும் அமீர் ஆகிய இருவரும் ஒரு படத்தில் இணைய உள்ளனர் என்ற செய்தி நேற்று வெளியானது என்பது அனைவரும் அறிந்ததே. ஏற்கனவே வெற்றிமாறன் இயக்கிய வடசென்னை படத்தில் அமீர் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்த நிலையில் மீண்டும் வெற்றிமாறன் இயக்கத்தில் அமீர் நடிக்கிறாரா? அல்லது வெற்றிமாறன் இருவரும் சேர்ந்து ஒரு படத்தை உருவாக்க இருக்கிறார்களா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது.

இந்த நிலையில் இது குறித்த முக்கிய தகவலை இயக்குனர் அமீர் தெரிவித்துள்ளார். வெற்றிமாறன் மற்றும் தங்கம் ஆகிய இருவரது கதை உருவாக்கத்தில் எனது திரைக்கதை வசனம் மற்றும் இயக்கத்தில் புதிய திரைப்படம் ஒன்றை துவக்க உள்ளேன் என்று அமீர் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்துள்ளார்.

மேலும் இந்த படம் குறித்த அனைத்து விவரங்களையும் விரைவில் பகிர்ந்து கொள்கிறேன் என்றும் அவர் கூறியுள்ளார். இதிலிருந்து வெற்றிமாறன் கதை எழுதும் படத்தை அமீர் இயக்கவுள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் இந்த திரைப்படத்தில் நடிக்க உள்ள நடிக நடிகையர் தேர்வு நடைபெற்று வருவதாகவும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இந்த படத்தில் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் மற்றும் நடிகை இருவர் நடிக்க இருப்பதாகவும் இந்த தகவல் வெளி வந்தவுடன் திரையுலக ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை அளிக்கும் என்றும் படக்குழுவினர்கள் தரப்பிலிருந்து செய்திகள் கசிந்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version