பல்சுவை

வெற்றிலையின் பயன்கள்!

Published

on

* பாத்திரத்தில் சிறிது விளக்கெண்ணெய்யுடன், நீர்விடாமல் அரைத்த வெற்றிலை பசையை சேர்க்கவும். இதை பத்தாக போட்டுவர கீழ்வாதம், விரைவாதம் சரியாகும்.

* அடிக்கடி தலைவலிக்கிறதா? கவலை வேண்டாம். இரண்டு வெற்றிலை இலைகளை கசக்கி சாறு எடுத்து அதில் கற்பூரத்தை சேர்த்து குழைத்து வலி இருக்கும் இடத்தில் தடவுங்கள்.
தலைவலி பறந்துவிடும்.

* தாம்பூலம், மெல்லிலை என்று அழைக்க கூடிய வெற்றிலையில் அற்புதமான மருத்துவ குணங்கள் உள்ளன.

* இது வாயுவை வெளித்தள்ள கூடியது. நோய்கள் வராமல் தடுக்கிறது. நுண்கிருமிகளை போக்க கூடியது.

* முற்றிய வெற்றிலை சாற்றில் 2 மிளகு, சிறிதளவு சுக்கு சேர்த்து தேனோடு கலந்து சாக்கிட்டு வர மூச்சுத் திணறலில் இருந்து விடுபடலாம். தேன் கடிக்கு கூட வெற்றிலை சிறந்த மருந்தாகிறது.

* கடுகு மண்ணெயில் வெற்றிலையை போட்டு சூடுபடுத்தி, ஒரு துணியில் வைத்து மார்பில் கட்டினால் மூச்சித்திணறல் மற்றும் இருமல் கட்டுப்படும.

* கேரட் மற்றும் தக்காளிச்சாறு இதனுடன் கொஞ்சம் தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் உடல் வலிமை பெரும்.
உணவுக்கு பின் தண்ணீரில் சிறிது கருப்பட்டியை கரைத்து குடிக்கவும். இதனால் வயிற்றில் அமிலம் சுரப்பது குறையும்.

* வெற்றிலை வயிற்றில் இருக்கும் வாயுவை வெளித்தள்ளும் தன்மை கொண்டது. மூளை, இதயம், கல்லீரல், மண்ணீரல் ஆகியவற்றை பலப்படுத்தி ஆரோக்கியத்தை தரக்கூடியது.

* நரம்பு மண்டலத்துக்கு பலம் கொடுப்பதால் படிக்கும் குழந்தைகளுக்கு வெற்றிலை சாறு கொடுத்துவர ஞாபக சக்தியை அதிகரிக்கும். வெற்றிலை சாறை ஒரு சொட்டு காதில் விட்டால், காதில் ஏற்படும் வலி, சீல் பிடித்தல் போன்றவை குணமாகிறது

seithichurul

Trending

Exit mobile version