ஆரோக்கியம்

வெட்டிவேரின் அற்புதமும், மகிமைகள்!

Published

on

வெட்டிவேரின் மகிமைகள்!

 

கோடையில் உஷ்ணத்தின் தாக்கத்தைக் குறைக்கும் தன்மை கொண்டது வெட்டிவேர். இதை நீரில் ஊறவைத்து அந்த தண்ணீரே தினமும் குடித்து வந்தால் சுடு, தாகம் தணியும். கோடைக் காலத்தில் மண்பானை நீரில் வெட்டிவேரை இட்டுக் குடிப்பது வழக்கம்.

நாவறட்சி, காய்ச்சல் மற்றும் வயிற்றில் ஏற்படும் நோய்களைக் கட்டுப்படுத்தும். வாந்தி பேதிக்கும் இது நல்ல மருந்தாகும். மேலும் சளி தொந்தரவு ஏற்படாமல் இந்த வேர் பாதுகாக்கும்.

நாணல் மற்றும் தர்ப்பைப் புற்கள்!

வெட்டிவேர் அதிக வாசம் உடையதாகவும், மருத்துவ தன்மை அதிகம் உள்ளதாகவும் இருக்கிறது. வெட்டிவேர் புல் இனத்தைச் சேர்ந்தது.

நாணல் மற்றும் தர்ப்பைப் புற்களைப் போல இது நான்கு முதல் ஐந்து அடி உயரம் வரை வளரும். வேர் கொத்துக் கொத்தாக இருக்கும்.

வெட்டிவேர் ஊறிய நீரைக் குடித்தால் காய்ச்சல், நீர் எரிச்சல், நீர்க் கடுப்பு, உடல் சோர்வு, தோல் நோய்கள் மற்றும் மனஅழுத்தம் போன்றவை குறையும்.

வெட்டிவேரின் மருத்துவ பயன்கள்!

வெட்டிவேரின் மருத்துவ பயன்கள் ஏராளமாக உள்ளன. வெட்டிவேர் உடலின் வேர்வையும், சிறு நீரையும் பெருக்கி வெப்பத்தை அகற்றி உடலுக்கு உரமாக்கியாகவும்.

வெட்டிவேர் கவலையை நீக்கி மனதை அமைதிப்படுத்தும், மன அழுத்தத்தை நீக்கவும் பெரிதும் உதவுகிறது.

வெட்டிவேரின் வாசம்!

வெட்டிவேரைத் தண்ணீர் விட்டு அரைத்து பசையாகச் செய்து கொண்டு பல்வலி, தலைவலி போன்றவற்றுக்கு நிவாரணியாகப் பயன்படுத்தலாம்.

காய்ச்சலுக்குப் பின்பு ஏற்படும் உடல் சோர்வுக்கு வெட்டி வேரை நீரில் இட்டுக் கொதிக்கவைத்துப் பருகவேண்டும். அந்த நீரைப் பருகுவதால் ஜீரண சக்தி அதிகரிக்கும்.

வெட்டிவேரை எண்ணெய்!

கால் எரிச்சல், கால் வலி போன்றவற்றிற்கும் வெட்டிவேரைத் தேங்காய் எண்ணெய்யில் இட்டுக் காய்ச்சி, இரண்டு நாட்கள் கழித்து வடிகட்டி தொந்தரவு தரும் இடங்களில் பூசலாம்.

seithichurul

Trending

Exit mobile version