தமிழ்நாடு
கால்நடை மருத்துவ படிப்பு: முதல் ஐந்து இடங்களை பிடித்த மேற்கு மாவட்ட மாணவர்கள்!
கால்நடை மருத்துவ படிப்பிற்கான தரவரிசைப் பட்டியல் வெளியான நிலையில் இதில் முதல் 5 இடங்களை மேற்கு மாவட்ட மாணவ மாணவிகள் பிடித்துள்ளது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் கால்நடை மருத்துவ கல்லூரிகளில் சேர்வதற்கான படிப்புகளுக்கு தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் பி.வி.எஸ்சி. – ஏ.ஹெச் படிப்புக்கு 480 இடங்கள் உள்ளன. இதில் அகில இந்திய இட ஒதுக்கீடு 72 இடங்கள் போக மீதமுள்ள 408 இடங்கள் மாநில அரசுக்கு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கால்நடை மருத்துவப் படிப்புக்கான படிப்பான பி.டெக் பால்வள தொழில்நுட்ப படிப்பு உள்ளிட்ட படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத சிறப்புப் ஒதுக்கீட்டின்படி முதல் 5 இடங்களை பிடித்த மாணவ மாணவிகள் பெயர்கள் தற்போது வெளிவந்துள்ளது.
இதில் திருப்பூர் மாணவி ப்ரியா முதலிடத்தையும், தர்மபுரி மாணவி பவித்ரா இரண்டாம் இடத்தையும், நாமக்கல் மாணவர் தீபக் குமார் மூன்றாவது இடத்தையும், நாமக்கல் மாணவர் கனிதாரன் 4ஆம் இடத்தையும், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்வேதா 5-ஆம் இடத்தையும் பிடித்துள்ளனர்.
கால்நடை மருத்துவ படிப்பில் முதல் ஐந்து இடங்களையும் மேற்கு மாவட்ட மாணவ-மாணவிகளை பிடித்துள்ளது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.