சினிமா செய்திகள்

பாடகி லதா மங்கேஷ்கர் காலமானார்: துயரக்கடலில் இசைத்துறை!

Published

on

பழம்பெரும் பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கர் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பயனின்றி சற்று முன்னர் காலமானார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு வயது 92.

30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களையும் தனிப்பாடல்களையும் பாடிய லதா மங்கேஷ்கர் சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப் பட்டார் என்பதும் இதனை அடுத்து அவர் மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நேற்று லதா மங்கேஷ்கரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டு இருந்த நிலையில் சற்று முன் அவர் காலமானார் என்ற தகவல் இசைத் துறைக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

லதா மங்கேஷ்கர் மறைவை அடுத்து திரையுலக பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் பலர் தங்களது சமூக வலைதளங்களில் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இசைத்துறையை துயரக் கடலில் ஆழ்த்தி விட்டு சென்ற லதா மங்கேஷ்கரின் ஆத்மா சாந்தி அடைய வேண்டும் என ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Trending

Exit mobile version