சினிமா செய்திகள்

30 கோடி ரூபாய் சொத்தை திருப்பதி கோயிலுக்கு தானமாகக் கொடுத்த எம்.ஜி.ஆர் பட நடிகை!

Published

on

பழம்பெரும் நடிகை காஞ்சனா தனது கோடிக்கணக்கான சொத்துகளைத் தொடர்ந்து திருப்பதி கோயில் தேவஸ்தானம் பெயருக்கு தானமாகக் கொடுத்து வருகிறார்.

எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன் எனப் பழம்பெரும் நாயகர்களுக்கு ஆஸ்தான நாயகியாக இருந்தவர் நடிகை காஞ்சனா. தற்போதும் சினிமாக்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன்னர் தெலுங்கு மொழியில் வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தில் நாயகன் விஜய் தேவரகொண்டாவுக்கு பாட்டி ஆக நடித்திருப்பார்.

திருப்பதி தேவஸ்தானம் சார்பில் சென்னையில் பத்மாவதி தாயாருக்குக் கோயில் கட்ட முடிவு செய்யப்பட்டது. அதற்காக ஜி.என்.செட்டி சாலையில் திருப்பதி கோயில் தேவஸ்தானம் போர்டு இடம் பார்த்து வந்தது. இதற்காக நடிகை காஞ்சனா சென்னை ஜி.என்.செட்டி சாலையில் உள்ள தனக்குச் சொந்தமான இடத்தை திருப்பதி கோயிலுக்கு தானம் ஆக எழுதி வைத்துள்ளார்.

இந்த நிலம் சுமார் 30 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்பு கொண்டதாகும். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் கூட நடிகை காஞ்சனா தனக்குச் சொந்தமான 80 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்தையும் திருப்பதி கோயிலுக்கே தானம் ஆகக் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version