சினிமா செய்திகள்

பழம்பெரும் தமிழ் நடிகை காலமானார்: திரையுலகினர் இரங்கல்

Published

on

பழம்பெரும் தமிழ் நடிகை ஜெயந்தி சற்றுமுன்னர் காலமானார் என்றும் அவருக்கு வயது 76 என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் நூற்றுக்கணக்கான திரைப்படங்களில் நடித்தவர் பழம்பெரும் நடிகை ஜெயந்தி. தமிழில் குறிப்பாக அன்னை இல்லம், நீர்க்குமிழி, கார்த்திகை தீபம், பாமா விஜயம், எதிர்நீச்சல், இரு கோடுகள், புன்னகை, வெள்ளி விழா, கொம்பேறி மூக்கன், செங்கோட்டை, உள்பட பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ஜெயந்தி.

ஜெமினி கணேசனுடன் ஜெயந்தி நடித்த திரைப்படங்கள் சூப்பர் ஹிட் ஆகின என்பதும் அதில் புன்னகை மற்றும் வெள்ளி விழா ஆகிய திரைப்படங்கள் அனைத்து தரப்பினர்களும் கவர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. எதிர்நீச்சல் படத்தில் இவரது நடிப்பிற்கு மிகப்பெரிய பாராட்டு கிடைத்தது என்பதும் பாமா விஜயம் படத்தில் காமெடியில் கலக்கி இருப்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை ஜெயந்தி சற்று முன்னர் காலமானதாக அவரது உறவினர்கள் அறிவித்துள்ளனர். இதனையடுத்து அவரது ஆத்மா சாந்தி அடைய திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை ஜெயந்தியின் இறுதிச்சடங்கு பெங்களூருவில் இன்று நடைபெறும் என்றும் இதில் ஏராளமான திரையுலக பிரபலங்கள் கலந்து கொள்ள இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

Trending

Exit mobile version